வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!

Sunday, March 17th, 2019

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புனரமைக்கப்படாதிருக்கும் பல வீதிகளை புனரமைக்கு முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கப்பண்டான் வீதி மற்றும் சங்கானை சிவப்பிரகாச பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீதி  ஆகியன செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வீதிகளின் செப்பநிடும் பணிகள் தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தருடன் தொழில் நுட்பக்குழு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: