வலிகாமம் மேற்கில் திண்மக் கழிவகற்றல் திடலை மீளமைக்க நடவடிக்கை!

Friday, May 10th, 2019

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டும் திடலை மீளமைப்பதற்கான நடவடிக்கைகளை வலிகாமம் மேற்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்றையதினம் அராலி கிழக்கிலுள்ள குறித்த பிரதேச சபையின் சுகாதார குழு தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

10 மில்லியன் ரூபா செலவில் குறித்த திண்மக்கழிவகற்றல் திடல் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.