வலிகாமம் தெற்கு பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!

Friday, December 14th, 2018

வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி பொது அமைப்பகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன

வலிகாமம் தெற்கு பிரதேச  செயலகத்திற்குட்பட்ட உடுவில் ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் உடுவில் மாதிரி கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்பிரகாரம் உடுவில் ஞானப்பிரகாசர் சனசமூக நிலைய கட்டட புனரமைப்பிற்காக 1 இலட்சம் நிதி உதவியும் உடுவில் மாதிரி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அலுவலக தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி தெற்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான வலன்ரயன் மற்றும் வலி தெற்க பிரதெச சபை உறுப்பினர்களான அரிகரன் உள்ளிட்ட கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

111 11

Related posts: