வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, January 6th, 2020


வலிகாமம் தென்மேற்கு பிரதேச இளைஞர் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் ஆராயப்பட்டது.

கட்சியின் வலிகாமம் தென் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் அவர்களின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது  தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்தும் தொழில் வாய்ப்புகள் இன்றி பல நூற்றுக்கணக்கான இளையுர் யுவதிகள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றனர். இவர்களது குடும்பங்களும் மிக வறிய நிலையிலேயே உள்ளன. இந்நிலையால் சில இளைஞர் யுவதிகள் தடம்மாறிச் செல்லும் நிலையும் உருவாக வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த நிலையிலிருந்து இளைஞர்களை பாதுகாத்து அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை சிறந்த முறையில் மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட சிவகுரு பாலகிருஸ்னன் இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் வேலையின்மை பிரச்சினை மற்றும் அவர்களிடையே இதர தேவைப்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை கட்சியின் செயலாளர் நாயகமம் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார். ஆனாலும் அவரது முன்னெடுப்புக்களை அழுத்தமாக செய்வதற்கு அவரிடம் அரசியல் அதிகாரங்கள் போதாதுள்ளது.

இப்பிரதேசத்தில் மட்டுமல்ல தமிழ் மக்களது பிரச்சினைகளும் முழுமையாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். ஆனாலும் அதற்கான அரசியல் அதிகாரம் இன்னமும் எமது கரங்களுக்கு கிடையாதிருப்பது மக்களது துரதிஸ்டம் என்றே கருதுகின்றேன். இந்நிலையை நீங்கள் மாற்றியமைத்தால் அடுத்துவரும் சில ஆண்டுகளில் உங்களது பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு கிடைக்கும்.

தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்ராக இருப்பதால் அதனுடன் தொடர்புடைய பல சுயதொழில் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இதனூடாக ஓரளவேனும் எமது இளைஞர் யுவதிகளிடையே காணப்படும் வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.

இதன்போது கட்சியின் வலிகாமம் தென் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts: