வற் வரி அதிகரிப்பு – பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

வற் வரியானது பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்..
வற் வரி விதிப்பினால் பாடசாலை பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ள நிலையில், நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமே வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. வற் வரி மூலம் பெறப்படும் வருமானம் இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் பாடசாலை பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் உள்ளூர் பாடசாலை பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த பரீட்சைகளின் விடைத்தாள்களை பாடசாலை விடுமுறை காலத்திற்குள் திருத்தி முடிப்பதற்கு நடவடிக்கை- கல...
மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்ப...
இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!
|
|