வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!
Tuesday, June 6th, 2023யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே மின் கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் !
பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் - பேராசிரியர் நீலிகா மளவிகே சுட...
அரச வங்கிக் கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடிய எத்தகைய சூழ்நிலையும் நாட்டில் காணப்படவில்லை - அரச வங்...
|
|