வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017ஆம் ஆண்டு பிரகடனம்? – ஜனாதிபதி

எதிர்வரும் 2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற மஹாவலி அபிவிருத்தி அமைச்சு அபிவிருத்திக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அரசாங்கத்துறை, தனியார்துறை, அரச சார்பற்ற அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து இந்த நோக்கத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.வறுமை ஒழிப்பு பற்றி பேசும் போது சமூர்த்தி மற்றும் திவிநெகும திட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. எனினும் இந்த திட்டங்களில் உள்ளடக்கப்படாத பெரும் எண்ணிக்கையிலான வறியவர்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தனியார்துறையில் குறைந்த பதவிகளில் கடமையாற்றுவோர் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.நாட்டின் 25 மாவட்டங்களையும் ஒரே விதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.நல்ல, கெட்ட விடயங்களை அரசியல் மேடைகளில் கடந்த சில மாதங்களில் கேட்டு வருகின்றோம்.
நாட்டை வறுமையிலிருந்து மீட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த குரல் கொடுக்கப்படவில்லை.காத்திரமான செயற்திறன்மிக்க ஓர் திட்டத்தின் ஊடாக அனைவரும் இணைந்து நாட்டில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|