வறுமையை ஒழிப்பதே இலக்கு – பொருளாதார அபிவிருத்தி அமைச்சு!

Monday, July 24th, 2017

நாட்டில் வாழும் வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை இல்லாது ஒழிப்பதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இலக்கு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிராமங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், உணவுப்பாதுகாப்பு, கிராமங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல் உள்ளிட்ட 3 காரணங்களின் அடிப்படையிலேயே, நல்லாட்சி அரசாங்கம் பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: