வறுமையை ஒழிப்பதற்கு இணைந்து உழைப்போம் – முல்லை. மாவட்டச் செயலர்!
Saturday, February 9th, 2019முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வறுமையை ஒழிக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது மிக முக்கியம். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை நான்கு இனங்களைக்கொண்ட நாடு. அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முல்லைத்தீவு மாவட்டமும் மூன்று இனங்களைக்கொண்ட மாவட்டமாகவும், நான்கு மதங்களைக் கடைப்பிடிக்கின்ற ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.
தரப்பட்ட கடமைகளை உணர்ந்து இன, மத வேறுபாடுகள் இன்றிச் செயற்பட்டு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமானது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதன் ஊடாக மாவட்டத்தின் அபிவிருத்தியை நிலை நிறுத்த அனைவரும் ஒருங்கிணைவோம் என்ற தீர்மானத்தை நாம் இன்று எடுத்துக்கொள்வோம்.
எமது மாவட்டத்தில் மீள்குடியமர்வு நடந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளன. வறுமையில் இரண்டாவது மாவட்டமாக உள்ளோம். எமது மாவட்டத்தில் இருந்து வறுமையை ஒழிக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண்கின்ற மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை மாற்ற வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
Related posts:
|
|