வறுமையான குடும்பங்களில் இருந்துவரும் மாணவர்களே சாதிக்கதுடிக்கின்றனர் – யாழ்ப்பாண மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம்.
Tuesday, October 2nd, 2018
யாழ்ப்பாணக் கல்வித்துறையில் வசதியுடன் வாழும் செல்வம் படைத்த குடும்பங்களில் இருந்து கல்விகற்கும் மாணவர்களை விட வறுமையான குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகள் சாதிக்கத் துடிக்கின்றனர். அவர்களை நாம் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாண மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்தின விழாவில் பிரதானவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்குமேலும் தெரிவிக்கையில் சிறுவர்கள் மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்து பவர்களாகவும், பொறுப்பு உள்ளவர்களாகவும் திகழவேண்டும். இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களையும், முதியவர்களையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் உள்ளது.
இன்றைய சிறுவர்கள் எமது சமூகத்தின் நாளைய தலைமுறையினர். எனவே அவர்களை நாம் நல்வழிப்படுத்தி அவர்களை சரியானபாதையில் பயணிக்க செய்யவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
Related posts: