வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது – அரசாங்க அதிபர் அருமை நாயகம்!

Thursday, March 28th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் தொடர்ந்தம் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாகவே காணப்படுகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சைப்பிரிவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வறுமைக்கோட்டிற்கு உள்ளாகிய மாவட்டமாகவே காணப்படுகின்றது.

ஆரம்பத்தில் இருந்த இந்த நிலைமை தொடர்ச்சியாக காணப்படுகின்றது. என்பதை இந்த புள்ளி விபரங்களின் ஊடாக அறிய முடிகின்றது.

அதற்கும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அந்தக்காரணங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு அதே நிலையில் இருப்பது என்பது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்கு ஒரு சாதகமாக அமையாது.

இந்த அடிப்படையில் இங்குள்ள பிரச்சனைகள் குறைபாடுகளை அடையாளங் கண்டு அதற்கேற்றாற் போல் அந்தப்பிரச்சனைகளிருந்தும் விடுபட்டு முன்னேறிச் செல்லுதல் என்ற தன்மையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் மக்களை மையப்படத்தித்தான் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களின் அபிவிருத்திகளை நோக்கிய துறைகளில் இந்த சுகாதாரத்துறை மிக முக்கியமானது.

சுகாதாரத்துறையை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யவேண்டிய அதிக தேவைப்பாடு காணப்படுகின்றது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத்திணைக்களம் மாவட்டச் செயலகத்தடன் அடிக்கடி தொடர்பு கொண்ட தேவைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றது.

கடந்த காலங்களில் மருத்துவ உபகரணங்களை எங்களினுடைய உதவியுடன் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

மேலும் பல உதவிகளை நாம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். நாங்கள் வீதிகளை செப்பனிடலாம். குளங்களை புனரமைக்கலாம்,  வீடுகளைக்கட்டலாம், ஆனால் ஒரு சிறந்த தேக ஆரோக்கியமுள்ள சமூகமாக இருப்பதன் மூலம் தான் ஒரு சிறந்த சமூகத்தைப்பார்க்க முடியும்.

அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் சேவைகளையும் வழங்குகின்ற ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக வைத்தியசாலைகளும் அதன் உத்தியோகத்தர்களும் காணப்படுகின்றனர்.

அந்த அடிப்படையில் வைத்தியசாலைகளுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: