வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரின் உதவியில் கட்டப்பட்ட யாழ் மாவட்ட கட்டளை தளபதியால் வீடு கையளிப்பு!

Saturday, November 27th, 2021

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்றையதினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை  தளபதியினால்  வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் சமூக நலனோம்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதனடிப்படையில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் புத்தூர் பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம்  கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி இராணுவக் கட்டளைத் தலைமை உயரதிகாரிகள் கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

000

Related posts: