வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலர் இரவீந்திரதாசன்!

Wednesday, December 5th, 2018

எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தூக்கி நிறுத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

கனடா  வாழ் முருகேசு விசாகன்  அவர்களின்  நிதி பங்களிப்பில்  அரியாலை கிழக்கு பெரியதோட்டம் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசலை  மாணவர்களுக்கு  பாடசாலை  கற்றல் உபகரணங்களை   அம்பலம் இரவீந்திரதாசன் நேற்றையதினம் வழங்கி வைத்தார்.

இவ் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களுக்கான பணிகளை என்ன இடர்பாடுகள் நெருக்கடிகள் வந்தாலும் கட்சியின் செயலாளர் நாயகத்தின் தலைமை வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுப்பதற்கு நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம்.  சிறார்களின் எதிர்காலம் கருதியதான இந்த செயற்பாட்டை செய்த முருகேசு விசாகன்  அவர்களது பணி தொடர்ந்தும் இவ்வாறான வறிய மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கடற்றொழிலார் சங்க தலைவர், பெற்றோர்கள், கட்சியின் குறித்த பிரதேச வட்டார செயலர்  என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

dc729b46-40b9-47cc-99a2-009091d349ab

47398081_1224331124384971_4921349591351164928_n

47350858_1224331291051621_7405627381949399040_n

11fa0e36-a3d9-4763-9d54-2106f7ab9abd

Related posts: