வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Friday, June 8th, 2018

மாணவர்கள் எதிர்காலத்தில் சாதனையானர்களாக மிளிர “மாறி வருகின்ற உலகின் கல்வி ஓட்டத்திற் கற்ப தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலரும் வடக்கு மாகணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்தை சேர்ந்த பத்து மாணவர்களுக்க மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது மாணவர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே வை.தவநாதன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் நீண்டதூரமாக செல்லவேண்டியுள்ளது. இதன்போது துவிச்சக்கரவண்டி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இருக்கும் நிலைமையை  நாங்கள் அவதானித்து வருகின்றோம். முடிந்தளவு மாணவர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறான கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் நாங்கள் செய்து வருகின்றோம். எனவே மாணவர்கள் இவ்வாறு கிடைக்கின்ற உதவிகளை சரியானமுறையில் பயன்படுத்தி தங்களின் கல்வி அபிவிருத்தியில் முன்மாதிரியாக சிறந்த அடைவுமட்டத்தினை பெறுவதற்கு எத்தனிக்க வேண்டும்.

அதுமாத்திரமன்று வழங்கப்படுகின்ற துவிச்சக்கரவண்டிகளையும் பராமரித்துப் பேணவேண்டும் எனவும் வை.தவநாதன் தெரிவித்தார்.

இடம்பெற்ற இந்நிகழ்வில் வலய கல்விப்பணிப்பாளர் திரு.குயின்ரன்ஸ், மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

தனது குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து சென்ற 2017 ஆம் ஆண்டிலும் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் கிளிநொச்சி வலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்திருந்தார்.

மாவட்ட கல்வி அபிவிருத்தி செயற்பாட்டுக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துவருவதையிட்டு வலய பணிப்பாளர் தனதுரையின்போது மாகாணசபை உறுப்பினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

34730462_1791914360847643_840625155385327616_n 34811355_1791914337514312_6516968978772918272_n

Related posts: