வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!

Tuesday, August 13th, 2019

வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கோண்டாவில் மகமாஜி சனசமூக நிலைய பகுதியில் வாழும் ஒருதொகுதி வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குடும்ப வறுமை காரணமாக பல சிறுவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை இடைநடுவே கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் எமது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடையின்றி தொடரவேண்டும் என்ற நோக்கத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக கோண்டாவில் மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தமது மாணவர்களின் நலன்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கனடாவில் வாழ்ந்துவரும் புவிராஜ் அவர்களின் நிதி உதவியில் வழங்கப்பட்ட குறித்த கற்றல் உபகரணங்களை கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் கட்சியின் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: