வறிய மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்குவிக்கும் ‘ப்ரக்ஞாபந்து’ புலமைப்பரிசில் நிதியம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்!

Wednesday, March 17th, 2021

“ப்ரக்ஞாபந்து” புலமைப் பரிசில் நிதியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வியைத் தொடர்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இந்த புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாவை ஆரம்பத் தொகையாக இட்டு இந்த “ப்ரக்ஞாபந்து” புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிதியத்திற்கு எவரும் நிதியுதவி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: