வறிய மக்கள் உழைப்பை சுரண்டும் நிதி நிறுவனங்கள் – வாழ்வின் எழுச்சித் திட்ட பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
Monday, February 20th, 2017
நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி வறிய மக்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட எழுச்சித் திட்டப் பணிப்பளர் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வறிய மக்கள் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதத்தை முதலில் விசாரித்து அறிந்து கொண்டு கடன் பெற வேண்டும். எந்த நிறுவனங்கள் கடன் வழங்கினாலும், மக்கள் விரைந்து சென்று கடனைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பின்னர் கடனை செலுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர் சிலர் விரக்தி நிலைக்கும் சென்று விடுகின்றனர். உடலை வருத்தி உழைத்த பணத்தை வட்டியாகச் செலுத்தி தமது குடும்பத்தை மேலும் வறுமை நிலைக்குத் தள்ளும் நிலமையை மக்கள் உணர்ந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும் கொழுத்த இலாபம் பெறும் நில நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்களை இலக்கு வைத்தே தமது தொழிலைச் செய்கின்றன.
ஏட்டிக்குப் போட்டியாக உருவாகின்ற சில தனியார் கம்பனிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சாதாரண மக்கள் மத்தியில் புகுந்து குறிப்பிட்ட பணத்தை வாராந்த, மாதாந்த, காலாண்டு அரையாண்டுக் கடன்களாக வழங்கி அவற்றுக்கு அதிகூடிய வட்டியை அறவிட்டு மக்களைச் சுரண்டி பிழைக்கின்றன. மறைமுகமான முறையில் வரிய மக்கள் மீதான இந்தச் சுரண்டல் இலேசாக இடம்பெறுகின்றது இது தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும் என்றார்.
Related posts:
|
|