வறிய மக்களை விலைவாசியால் மேலும் துன்புறுத்தியது சஜித்தின் அரசே- யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வர் இளங்கோ!
Thursday, November 7th, 2019
யுத்தம் நிறைவு செய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பிய தன் பின்னர் இப்பகுதியின் அபிவித்திகளை முழுமையாக மேற்கொண்டு பல சேவைகளை முன்னெடுத்து இப்பகுதியின் மேம்பாட்டை மேற்கொண்டது எமது தலைவர் மேற்கொண்டமுயற்சியே என ஈழமக்கள் ஜனானாயக கட்சியின் யாழ் மானகசபையின் முன்னாள் பிரதி முதல்வர் றீகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை எழிலூர் பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவு பிரசார கூட்டம் தோழர் கமலேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்தகாலத்தில் இப்பகுதி மக்கள் ஓரளவு வளமான வாழ்வியலை நோக்கி முன்னேற்றம் கண்டு வந்தனர். ஆனால் ஆட்சி மாறியதும் அந்த நிலமை முழுமையாக மாற்றம் கண்டுட்டது. அது மட்டும்லாது சாதாரண பொருட்களை கூட வங்க முடியாத நிலையில் இருக்கின்றனர்.
இதற்கு காரணம் இன்றைய அரசுதன் அந்தவகையில் இந்த அரசாங்கம் எமது மக்களை மிகவும் வறிய நிலைக்கு கொண்டு சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாறாப்பட வேண்டும்.
அந்தவகையில் நாம் ஆதரிக்க கோரும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியை உறுதிப்படுத்த அணிதிரண்டு வக்களிப்போம். அதனூடக எமது தலைவர் உங்கள் அனைவரதும் அபிலாசைகளை வென்றெடுத்து தருவார் என்றார்.
Related posts:
|
|