வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு.!

வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் ஒருதொகுதியினருக்கான தற்காலிக தேவைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும் முகமாக கொக்குவில் கிழக்கு ஜே-122 கிராம சேவகர் பிரிவக்குட்பட்ட ஒருதொகுதி மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் கூரைத்தகடுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது..
வறிய மக்களது அடிப்படை தேவைகளை தற்காலிகமாக பூர்த்திசெய்யும் வகையில் முன்னேடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக குறித்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி மிக வறியமக்களுக்கான கூரைத்தகடுகளே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் பிரதேச நிர்வாகக்குழு உறுப்பினர்களான பிரதீபன், இரஜீவன் , ஜெயந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
படகு கவிழ்ந்து விபத்து – மண்டைதீவில் இளைஞன் பலி!
பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்துவிட்டனர் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு - இரத்த தானம் செய்ய முன்வருமாறு...
|
|