வறிய மக்களின் வாழ்வியலை மேம்படுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி திருமலையில் நடவடிக்கை!
Saturday, August 4th, 2018வறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக திருமலை மாவட்ட நகரமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் குறைகேள் நிகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கட்சியின் திருமலை மாவட்ட நிர்வாக செயலாளர் தங்கராசா புஸ்பராசா தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் திருமலை மாவட்டத்தின் நகரமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட கன்னியா வட்டாரம் -03, பீலியடி, நடேசர் வீதி ஆகிய கிராமங்களிலேயே குறித்த குறைகேள் நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அப்பகுதி மக்கள் தாம் நீண்ட காலமாக நிரந்தர வீடு இன்மை, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தமது பிரச்சினைகளை தற்போது எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவித்ததுடன், கடந்த காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தமக்கு பெற்றுத்தரப்பட்ட உதவிகளின் பின்னர் இதுவரை எந்தவொரு தேவைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என்றும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் மீண்டும் தற்போது கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் விரிவாக்கப்பட்டு மக்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எமது பிரச்சினைகளுக்கு கடந்த காலத்தில் தீர்வுகள் கிடைக்கப்பெற்றது போல மீண்டும் இனிவருங்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது என்ற நம்பிக்கை தமக்கு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
குறித்த பகுதி மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட புஸ்பராசா கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு குறித்த பிரச்சினைகளை கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|