வறிய நாடுகளால் 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று மீண்டும் பரவும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

2022ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று நோய் ஏழை நாடுகள் மூலம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஏழை நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என அதன் சிரேஷ்ட தலைவரான புருஸ் ஐல்வர்ட் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டிலும் கொவிட் பரவல் தொடர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஏனைய கண்டங்களில் உள்ள 40 வீத மக்களுடன் ஒப்பிடுகையில் ஆபிரிக்க கண்டத்தில் 5 வீதத்துக்கும் குறைவானோரே தடுப்பூசி பெற்றுள்ளனர்.
பெரும்பாலான கொவிட் தடுப்பூசிகள் உயர் வருமானம் அல்லது உயர் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வழங்கப்பட்டுள்ளன. உலகளவில் நிர்வகிக்கப்படும் டோஸ்களில் ஆபிரிக்காவில் 2.6% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கிலாந்து 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கியுள்ளது. மொத்தம் 100 மில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|