வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Wednesday, October 18th, 2017

18 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் குருநாகல் மாவட்டத்தில் 252000 பேரும் திருகோணமலையில் ஒரு இலட்சத்து 78 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை புத்தளம் மாவட்டத்திலேயே அதிகபடியாக 288784 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: