வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு – வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்டம்!

Wednesday, May 9th, 2018

யாழ்ப்பாணத்தில் வறட்சி காரணமாக வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரும்பிராய் மற்றும் இளவாலை பகுதிகளிலிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் வெங்காய பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விவசாயிகள் விளை நிலங்களில், கடந்த வருடம் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும், உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த வருடம் மாற்றுபயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், தமது பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு அந்த பகுதி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.