வறட்சியால் வடக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, August 1st, 2018

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தமாக 84 ஆயிரத்து 922 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் யாழ் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 400 குடும்பங்களும் கிளிநொச்சில் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 72 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 990 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: