வறட்சியால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களை மதிப்பிடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு பணிப்பு!
Monday, August 7th, 2023வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வடக்கில் இன்று பூரண கடையடைப்பு!
PCR பரிசோதனை குறித்து வெளியாகியுள்ள அதி முக்கிய செய்தி!
மக்கள் விரோதிகளே பொன்னாவெளி குழப்பத்தின் பின்னால் மறை கரமாக இருக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்ச...
|
|