வறட்சியான காலநிலை ஏற்பட்டால் மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை – நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

வறட்சியான காலநிலை ஏற்பட்டால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் – நீர் முகாமைத்துவத்தை நாங்கள் செய்கின்றோம். அனைத்தையும் அவதானித்தே, விவசாயம் மற்றும் மின்சாரம் என்பனவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. எனினும், விவசாயத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த நிலையில், வறட்சியான காலநிலையுடன் நீர்மட்டம் குறைவடைந்தால், மின்னுற்பத்திற்கு நீரை வழங்க முடியாது எனத் தாம் அறியப்படுத்தியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள அவர் பயிரிடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யார் எதிர்த்தாலும் சைட்டம் மருத்துவக் கல்லூரி மூடப்படாது – டாக்டர் நெவில்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி!
2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறைநாட்கள் வர்த்தகமானி அறிவித்தல் வெளியீடு!
|
|
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு முடியுமானவரை போராடுவோம் - நயினாதீவில் தவிசாளர் க...
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...
சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன - இலங்கை துறைமுக அதிகார சபை அறிவிப்பு!