வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தகவல்!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 72 ஆயிரத்து 100 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியின் காரணமாக சுத்தமான குடிநீடின்றி மக்கள் பாரியளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
அதன்படி, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 22 ஆயிரத்து 449 குடும்பங்களை சேர்ந்த 71 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை மாவட்டங்களில் 18 ஆயிரத்து 992 குடும்பங்களை சேர்ந்த 63 ஆயிரத்து 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளுடன் இருவர் கைது!
புதிய சட்ட மா அதிபர் நியமனம்!
பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்னமின்றி குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்த முடியாது - பொ...
|
|