வறட்சிக்காலநிலை – நீரை விநியோக 260 கோடி ரூபா நிதி!

Sunday, January 22nd, 2017

வறட்சியால் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்காக பௌசர்களைக் கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 5 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

தேசிய இடர்நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா இதுதொடர்பாக தெரிவித்ததாவது:.

380 பௌசர்கள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து அந்த மாவட்டங்களுக்குத் தேவையானவற்றை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

தேவைக்கு அமைய எதிர்காலத்தில் இரண்டாயிரம் நீர் தாங்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இந்த தேசிய பணியில் முப்படையினர் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

a12c6cdfa1c57d8d196a42d992b230e0_XL

Related posts: