வர்த்தமானி விலைப்படி அரிசி விற்பனை செய்யப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Wednesday, January 10th, 2018

அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதுக்கமைய 74 ரூபாவுக்கு நாட்டு அரிசி விற்பனை செய்யப்படவில்லை என பொது மக்கள் குற்றச்சாட்டு.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கட்டளைப்படி உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு ஒரு கிலோ கிராம் 74 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு விற்பனை செய்யப்படவில்லை என பொது மக்கள் தெரிவித்தனர்.

வவுனியா வர்த்தக நிலையங்களில் சிவப்பு நாடு அரிசி ஒரு கிலோ 90 ரூபா முதல் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக வர்த்தக நிலையங்களிடம் கேட்டபோது, அரிசி ஆலையில் கொள்வனவு செய்யும்போது அதிக விலைக்கே கொள்வனவு செய்கின்றோம். எனவே அரச அறிவித்தலின்படி விற்பனை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

Related posts: