வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் – தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவிப்பு!

Thursday, February 11th, 2021

மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடரபில் ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில் -உள்நாட்டவர்கள் புதிய நம்பிக்கை, உத்வேகத்துடன் உற்பத்திகளை மேற்கொள்ளும் விடயத்தில் அவதானம் செத்தியுள்ளனர் என்றும் அவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வத்தை மேலும் பலப்படுத்தவதற்கான ஒரு காரணியாக மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி அமையும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, இந்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதி இலங்கை மன்றக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியில் வர்த்தக கண்காட்சிக்கு வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts: