வர்த்தகர்  ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!

Sunday, July 16th, 2017

யாழ்ப்பாணத்தில் 63 வயதுடைய வர்த்தகரான வே.நடராஜா என்பவரைக் காணவில்லை என யாழ்.பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தனது வர்த்தக நிலையத்திற்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தே அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அவர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னைச் சந்திப்பதற்கு இருவர் வருவதாக கூறிச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயிருப்பதால் குறித்த இருவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts: