வரும் 21 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் போதை ஒழிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் போதை ஒழிப்பு வாரமாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல் சகல கல்வி சார்ந்த தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் பாவனையற்ற நாடாக மாற்ற வேண்டும் என்று அரச தலைவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
பாடசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரைக் கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் அரச தலைவர் பணித்துள்ளார்.
மாணவப் பருவத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிறது. சிலர் இதனை ஏன் பயன்படுத்துகின்றோம்? இதனால் என்ன பாதிப்புகள் உண்டாகும் என்பதை மாணவர்கள் அறியாமல் உள்ளனர். ஆகவே போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தப் போதை ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை இந்த வாரம் கடைப்பிடிக்கப்படும். துறை சார்ந்தவர்கள் நாடகங்கள், காணொலிகள், ஆற்றுகைகள் மூலமாக மாணவர்களுக்குத் தெளிவூட்டும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|