வரும் திங்களன்று பிரதமர் அவுஸ்திரேலியா பயணம்!

Saturday, February 11th, 2017

எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் அவுஸ்திரேலியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

13ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் பிரதமர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் முக்கிய அரச தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பிரதமர் நாட்டில் இல்லாத காலப் பகுதியில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பதில் அமைச்சராக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கடமையாற்றவுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் கடிதம் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.

PM

Related posts: