வரும் ஜனவரியில்93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்!

Saturday, November 25th, 2017

நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில், 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படாத 93 உள்ளாட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த மாதம் 27ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: