வரும் செவ்வாய்க்கிழமை புதிய வற் சட்டமூலம் சமர்ப்பிப்பு!

Sunday, October 2nd, 2016

பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி குறித்த சட்டமூலம் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது தடவை இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரேரணை, அமைச்சரவை அங்கீகாரம் பெறாமைக்காரணமாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் புதிய சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது.இதில், முன்னைய சட்டமூலத்தை காட்டிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

download

Related posts: