வருமானம் 23 சதவீதத்தினால் அதிகரிப்பு – நிதியமைச்சர்!

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியிலான வருமானத்தை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இந்த வருமானம் 1180 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்தவருடத்தில் இக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 959 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வருமானம் தொடர்பாக நிதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்தவருடத்தில் அரசாங்கத்தின் செலவுகள் மூலம் நாணயமாற்று செலவீனத்தை உள்வாங்குவதற்கு நாட்டின் அபிவிருத்தியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலமான பயன்களை பொதுமக்கள் பெற்றுவருவது சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தில் பெரும்பகுதியை திரட்டும் இலங்கை சுங்கப்பகுதி உள்நாட்டு இறைவரித்திணைக்களம் மற்றும் களால்திணைக்களம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முகாமைத்துவத்தின் காரணமாக வருமானத்தை அதிகரிக்கமுடிந்தது. அரசாங்கத்திற்கு கூடுதலான வருமானம் வரிகள் மூலமான வருமானத்தின் மூலமே கிடைக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.
வருடத்தின் 9 மாத காலப்பகுதியில் வரிமூலமான வருமானம் 1067 பில்லியன் ரூபாவாகும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். இதற்கமைவாக வரிமூலமான வருமானம் கடந்த 9 மாத கலப்பகுதியில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர் கடந்த சில வருடங்களில் மொத்த அரசகடன் அதிகரித்ததினால் அரசாங்கத்தின் வருமானம் வெளிநாட்டு நாணய மாற்று செலவை உள்வாங்குவதற்கு கூட போதுமானதாக அமையவில்லை.
இவ்வருடத்தில் அரசவருமானத்தின் மூலம் வெளிநாட்டு நாணயமாற்று செலவை உள்வாங்குவதற்கு முடிந்தமைக்கு காரணம் நாடு அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதாகும். இதேபோன்று பொதுமக்களுக்கும் இதன் மூலமான பயன்கள் கிடைத்துவருகின்றமையும் இதற்கு எடுத்துக்காட்டாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதுமாத்திரமன்றி இதன்பெறுபேறாக வரவுசெலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகையும் குறைந்துள்ளது என்றும் மேலும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|