வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Friday, January 12th, 2024

இந்த வருட நடுப்பகுதிக்குள் உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து இது ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,

அதற்கான கட்டணங்கள் 50 முதல் 70 டொலர்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்படும் என நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: