வருட இறுதிக்குள் 6 மாகாண சபைகளுக்கு தேர்தல்!

Thursday, May 3rd, 2018

இந்த வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவாலும், எதிர்க்கட்சிகளாலும் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் காரணமாகவே அரசு இந்த முடிவை தீர்மானித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்திருந்தது. இதேவேளை, வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

எனினும் இந்த 6 மாகாணங்களுக்குமான தேர்தலை பழைய விகிதாசார முறையில் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் விரைவில் அரசின் பங்காளிக் கட்சிகளுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: