வருட இறுதிக்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

Monday, April 19th, 2021

இந்த வருடம் நிறைவடைவதற்குள் ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தை அடையும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இந்த வருடம் நிறைவடைவதற்குள் 175 முதல் 180 ரூபாவுக்கு இடைப்பட்ட பெறுமதியை அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீனாவினால் வழங்கப்பட்ட கடன்தொகை காரணமாக நூற்றுக்கு 20 வீத வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: