வருடாந்தம் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழப்பு!

Saturday, October 1st, 2016

ஒவ்வொரு ஆண்டிலும் 16 வயதுக்கும் குறைந்த 270,000 சிறுவர் சிறுமியர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 2600 பேர் உயிரிழப்பதாகவும் இலங்கை குடும்ப சுகாதார பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

பாரிய விபத்துக்கு உள்ளாகும் பெரும்பகுதியான சிறுவர் சிறுமியர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட முன்னதாகவே உயிரிழக்கின்றனர். மோசமான காயங்களினால் அதிகளவான சிறுவர் சிறுமியர் உயிரிழக்கின்றனர்.

கொலை வாகன விபத்துக்கள் விசம் ஏறுதல் நீரில் மூழ்குதல் தீக்காயங்கள் விழுதல் போன்ற காரணிகளினால் அதிகளவு மரணங்கள் சம்பவிக்கின்றனர். சிறுவர் மரணங்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவை 10 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு ஏற்படுகின்றது. நாட்டில் ஒவ்வொரு நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவையும் ஒரு சிறுவர் மரணம் சம்பவிக்கின்றது.சிறுவர் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று நாடு முழுவதிலும் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

i3.php_-415x260

Related posts:

மருமகனுக்காக வடக்கு அபிவிருத்தியை பேரம் பேசிய விக்கி - நியமனம் கிடைக்காததால் ஆயிரம் மில்லியனை தடுத்த...
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் - அம...