வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 1500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

புதிய வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் மாத்திரம் 1500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டெங்குக் காய்ச்சலினால் 51,823 பேர் பீடிக்கப்பட்டனர். அவர்களில் 85 பேர் உயிரிழந்ததாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷீலா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலானவர்கள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 49.4 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவான வருடமாக கடந்த வருடத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
Related posts:
நேற்றுமுதல் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!
எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|