வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Tuesday, November 28th, 2023

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டத்தில் 35,537 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 6,884 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!
புரிந்துணர்வுகள் மூலமாக முன்னோக்கிச் செல்வோம் - யாழ். பல்கலையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ர...
இந்தவார இறுதிக்குள் எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அ...