வருகின்றது அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!

வரும் வாரம்முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் துறையினர் அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதமையால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின்போது குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவாகவும் சுதேச சம்பா ஒருகிலோ 85 ரூபாவாகவும் அதிகூடிய சில்லைறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெள்ளையரிசி ஒருகிலோ 65 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் துறையினர் அதனை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
00
Related posts:
அநீதி இழைக்கப்படுமானால் பாரிய போராட்டம் - வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர்!
சனிக்கிழமையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திறக்கப்படும்!
தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் - அரசியல் விடயங்களை சம்பந்தப்படுத்தக்க...
|
|