வரி மோசடியாளர்களை முறையாகக் கண்டறிய நடவடிக்கை – நிதியமைச்சர்!

வரி ஏய்ப்பாளர்களை இனங்காண ஒரு முறையான திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் வரிச் சுமையைக் குறைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேற்று விஜயத்தை மேற்கொண்ட போது அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கு அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டித் தரும் உள்நாட்டு அரசிறைத் திணைக்களம் முதலான நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டுமென்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு அரசிறைத் திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் விதத்தையும், அவற்றின் குறைநிறைகளையும் நேரில் கண்டறிந்ததோடு பொதுமக்கள் தொலைபேசி மூலம் சேவைகளைப் பெறக்கூடிய மத்திய நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று- நாடுமுழுவதும் விஷேட நிகழ்வுகள்!
யாழ்ப்பாணம் நாக விகாரை மீது விஷமிகள் தாக்குதல் - மக்கள் குழம்பமடைய வேண்டாம் என விகாராதிபதி ஸ்ரீ விமல...
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் – அமைச்சர் பந்துல நம்பிக்கை!
|
|