வரி சீர்திருத்தத்தை நிறுத்தகோரி யாழ்ப்பாணத்திலும் போராட்டம்!

Wednesday, March 1st, 2023

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும்  வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்று ஆதரவு வழங்கின.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் - பேராயர் கர்தினால் ரஞ்சித்தை ச...
இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை -...