வரிப்பண ஊழல் – மென்டிஸ் மதுபான நிறுவனத்திற்கு சீல்!

Thursday, July 25th, 2019

சரியான முறையில் வரிப்பணம் கட்டத் தவறியமையால் மென்டிஸ் மதுபான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகள் இரண்டின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கலால் திணைக்களத்தினால் குறித்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் 78 கோடி வரிப்பணம் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

மென்டிஸ் மதுபான நிறுவனம் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியின் பிரதான சந்தேகநபரான அர்ஜுன் அலோசியசுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: