வரிச் சுமையை பொதுமக்கள் மீது திணிக்க அனுமதிக்கக்க மாட்டேன்- ஜனாதிபதி
Tuesday, April 19th, 2016வரிச் சுமையைப் மக்கள் மீது சுமத்த அனுமதிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த வற் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென நிதியமைச்சு தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய வற் வரியை அதிகரிக்க இடமளிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி கூறியுள்ளார்.
வரி அதிகரிப்பினால் சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும்ஆகவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் தான் ஈடுபடப்போவது இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!
நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீன வெளிவ...
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்ப...
|
|