வரவைவிடச் செலவு அதிகம் என்பதால் சுற்றுலாத் துறைக்கு எழுதாரகை மாற்றம்?

Thursday, November 22nd, 2018

எழுதாரகை படகுச் சேவையை சுற்றுலா நோக்கத்துக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த படகு வேலணை பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 கோடி ரூபா செலவில் எழுதாரகை படகு அமைக்கப்பட்டது. ஊர்காவற்றுறையில் இருந்து எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கான பயணத்தை மேற்கொள்ளப் பயன்பட்டது. அண்மைக்காலமாக அதன் சேவை நிறுத்தப்பட்டு காரைநகர் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் வரையில் பயணிக்கக்கூடிய இந்தப் படகில் நாளொன்றுக்கு சராசரியாக 12 பயணிகள் வரையிலேயே பிரயாணம் செய்கின்றனர்.

ஆனால் பயணத்தில் கிடைக்கும் இலாபத்தை விட படகின் பராமரிப்புக்கு அதிக செலவு ஏற்படுகின்றது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.. இந்தப் படகு போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுவது இலாபம் தரக்கூடியதாக இருக்காது என்றும் அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கடல் சார்ந்த பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. இந்தப் படகை நாளாந்த பயணச் சேவைக்கு பயன்படுத்துவதைவிட சுற்றுலா சார்ந்த விடயங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதாரகை படகை வேலணை பிரதேச சபையின் ஆளுகையின் கீழ்ப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: