வரவு செலவு திட்டத்தை ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, September 17th, 2020புதிய ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
இதேவேளை, 18 வயதிற்கும் குறைவான வைப்பாளர்களை ஏற்றுக் கொள்வதற்கான சிறார் மற்றும் இளைய வைப்பாளர்கள் தொடர்பான திருத்தக் கட்டளைச் சட்டத்தை கொண்டுவரவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திருத்தத்தின் ஊடாக 18 தொடக்கம் 22 வயதிற்கு இடைப்பட்டவர்கள் வைப்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படவுள்ளனர்.
நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 தொழில் சட்டங்களை திருத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், கெரவலப்பிட்டியவில் 300 மெகாவாட் LNG மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச முறிகள் ஊடாக முதலீட்டாளர்களை அடையாளம் காண்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|