வரவு செலவுத் திட்ட தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கு புதிய குழு!

Thursday, October 20th, 2016

அடுத்த  ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தயாரிப்பு குறித்து கலந்து ஆலோசனை செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் எழும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கும் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இக்குழுவினர் செயற்படவுள்ளனர்.

இக்குழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, அகில விராஜ் காரியவசம், ஹரீன் பெர்ணான்டோ, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரதி அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோரே குழுவில் உள்ளடங்குகின்றனர்.நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஒப்புதலுக்கு அமைவாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்குழுவை நியமித்துள்ளார்.

Budget-415x260 copy

Related posts: